0041 79 785 16 85 wathanamtv@gmail.com

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் கடந்த 28.01.2020 அன்று விபத்தின் போது உயிரிழந்த 38 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நெவில்நெல்சன் பர்ணாந்து என்ற குடும்பஸ்தர் செய்த காப்புறுதிக்காக 58 இலட்சம் ரூபா ஆர்.பி.கோ காப்புறுதி நிறுவனத்தினரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. 24.07.2020 அன்று அளம்பில் பகுதியில் ஆர்.பி.கோ. நிறுவனத்தின் உத்தியோகத்தர் இ.இராகுலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம்,ஆர்.பி.கோ. நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரேரன் சம்பத்,அவது துணைவியார், உதவிப்பொது முகாமையாளர் ஆர்.வனேஜன், வவுனியா பிராந்திய முகாமையாளர் சஜிந்தன் ஆர்பிகோ காப்றுதி நிறுவனத்தின் ஊழியர்கள் பிரதேச மக்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள். இதன்போது காப்புறுதி செய்து உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவிக்கு நிலையான வைப்பிலிடக்கட்ட பணத்தின் காசோலையும் அவரது பிள்ளைகளின் மாத செலவிற்காக ஜந்து ஆண்டுகளுக்கு தலா நாற்பதாயிரம் காசோலையும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

Share this:

error: Content is protected !!