0041 79 785 16 85 wathanamtv@gmail.com

கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி நூலக பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது. குறித்த பரிசளிப்பு நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு கலாச்சார மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், அதிசிறப்பு விருந்தினராக வை்ததிய கலாநிதி சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது ரே்மைக்கான விருதுபெற்ற வைத்தியர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கௌரவித்து சிறப்பு விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சர்வதேச மற்றும் தேசிய விருதுகளை பெற்ற வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 50 புர்வரை கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை வாசிப்பு மாத போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களிற்கு பரிசுகளும், வெற்றி கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கருத்து தெரிவிக்கையில்,இன்று எமது தமிழ் தேசிய இனம் தனது தேசிய இனத்தின் வெளிப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றது. கிளிநொச்சியில் ஓர் மாணவன் மாற்றுதிறனாளிகளிற்கான சோளர் மூலம் இயங்க கூடிய சைக்கிள் ஒன்றை வடிவமைத்துள்ளார். வவுனியாவை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் வைத்திய துறைசார் கருவியினை கண்டுபிடித்துள்ளார். இவ்வாறு எமது இனம் தனக்கான சிறப்பு பண்புகளை வெளிப்படுத்தி வருகின்றது. இவ்வாறு பல ஆற்றல்களை வெளிப்படுத்தக்கூடிய பலரை இந்த மண் எமக்க தந்துள்ளது. கிளிநொச்சியை சேர்ந்தவரான வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் இன்று ஓர் போதனா வைத்தியசாலையில் பொறுப்புவாய்ந்தவராக இருப்பார் என்று யாரும் நம்பவில்லை. நேர்மையாக செயற்பட்டமைக்கான விருதினை அண்மையில் பெற்றிருந்தார். அது மாத்திரமன்றி சர்வதேச விருதான யுனெஸ்கோ விருதினையும் அவர் பெற்றிருந்தார். இக்கட்டான நிலையில் வைத்திய சேவையை மேற்கொண்டமைக்கான அந்த சர்வதேச விருதையும் அவர் பெற்றிருந்தார். இவ்வாறு பலரை எமது மண் கண்டுள்ளது. நான் அறிந்தவகையில் சத்தியமூர்த்தி அவர்கள் பெற்ற விருதுகள் தமிழர்கள் எவரும் பெற்றுக்கொள்ளாத விருதுகளாகவே காணப்படுகின்றது. இவ்வாறு எமது தேசிய இனம் இன்று மீண்டும் தனக்கான பல சிறப்பம்சங்களை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதற்கு இவ்வாறான நூலக வாசிப்பு பழக்கங்களும் உந்து சக்தியாக அமைந்தது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். இவ்வாறு மீள எழுந்து வரும் எம்மினத்தில் தற்போது காணப்படும் நிலைக்கு ஒற்றுமை வலுச்சேர்க்கும். எமக்குள் காணப்படுவது சகோதர பிரிவுகளே. அதனை தாண்டி நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய காலத்தில் தற்புாது நிற்கின்றோம் எனவும் அவர் இதன்புாது தெரிவித்தார்.
கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவிக்கையில்,பலரது வெற்றிக்கு வாசிப்பு பழக்கமே முதன்மை வகிக்கின்றது. இவ்வாறான நிலையில் நான் உயர்ந்து நிற்பதற்கு வாசிப்ப பழக்கமே எனக்கு உந்து கொடுத்தது எனலாம். அன்பான மாணவர்களே இந்த நிலையில் நீங்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகமாக பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறான வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும்போது பல சாதனைகளை மேற்கொள்வதற்கு அது உந்து சக்தியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொறியியலாளராக வரவேண்டும் என்ற கனவுடன் 13 வயதிலேயே மாற்றுதிரணாளிகளிற்காக சோளர் மூலம் இயங்கும் முச்சக்கர வண்டியை கிளிநொச்சி மாணவன் வடிவமைத்துள்ளான். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் மாற்றுத்திரணாளிகள் பலரை அவதானித்த இச்சிறுவன் எரிபொருள் பயன்பாடற்ற சோளரில் இயங்க கூடியவாறான முச்சக்கர வண்டியினை வடிவமைத்துள்ளான். கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் 9ம் தரத்தில் கல்வி பயிலும் பிரணவன் என்ற இந்த மாணவன் தான் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்பதே இலக்காக கொண்டுள்ளதாக கூறுகின்றான். சிறய வயதிலேயே இவ்வாறான வடிவமைப்புக்கள் மீது ஆர்வம் கொண்ட குறித்த மாணவன் பல்வேறு அறிவாற்றலை கொண்டுள்ளதாக சிறுவனின் பேரனார் தெரிவிக்கின்றார். நேற்று வெள்ளிக்கிழமை யூ ரியூப்பில் ரொட்டி தயாரிக்கும் முறையை பார்த்த குறித்த சிறுவன், பலகை மூலமாக உடனடியாக ஓர் வடிவமைப்பினை மேற்கொண்டு உடனடியாக பயன்படுத்தும் வகையில் பெற்றோரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கின்றார் சிறுவனின் பேரனார்.

இவ்வாறு திறமைகொண்ட குறித்த மாணவன் துவிச்சக்கர வண்டியில் இவ்வாறு வெடிவமைப்பினை மேற்கொண்டு பயன்படுத்தி வந்த நிலையில் மாற்றுதிறனாளிகளிற்காக இவ்வாறானதொரு வடிவமைப்பினை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தகூடிய மோட்டர் கிடைக்குமானால் அதனை மேலும் வலுச்சேர்க்க முடியும் எனவும் தெரிவிக்கின்றார்
இவ்வாவாறான வடிவமைப்பிற்காக தனக்கு 12 மாதங்கள் தேவைப்பட்டதாகவு்ம. இதனை பிரதி செய்வதற்கு 6 மாதங்கள் தனக்கு போதுமானதாகவும் தெரிவிக்கின்றார். இதேவேளை 70ஆயிரம் ரூபாவில் இவ்வாறான வசதிகொண்ட முச்சக்கர வண்டி ஒன்றை திறண்பட வடிவமைக்க முடியும் எனவும் அம்மாணவன் தெரிவிக்கின்றார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்ாறான மாணவர்களின் ஆற்றல்கள் படிப்படியாக வெளிக்கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

Share this:

error: Content is protected !!