0041 79 785 16 85 wathanamtv@gmail.com

யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வுகளில் தேவையற்ற விடயங்கள் ஆராயப்படுகின்றதே தவிர மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய படுவதில்லை என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தினார் சபையில் அண்மையில் நடந்த அமர்வின்போது குலம் கோத்திரம் பற்றி பேசி உறுப்பினர்கள் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது இவை தவிர்க்கப்பட வேண்டியவை சபையில் பேசப்பட வேண்டிய எவ்வளவோ விடயங்கள் உள்ளன மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்கள் தொடர்பில் குறிப்பாக திண்மக் கழிவு அகற்றல் தொடர்பில் தீர்க்கமான காத்திரமான தீர்மானம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை அது அவ்வாறிருக்க சபை அமர்வுகளில் தேவையற்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வது ஏற்றுக்கொள்ள முடியாத தொன்று எனவே யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் இல்லையெனில் மக்கள் தான் தீர்மானம் எடுக்க வேண்டி வரும் எனவும் தெரிவித்தார்

Share this:

error: Content is protected !!