0041 79 785 16 85 wathanamtv@gmail.com

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையருகே இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீளமான சுரங்கப் பாதை போதைப் பொருள் கடத்தல் கும்பலால் அமைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 2014இல் 2,966 அடி நீள சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது 70 அடி ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ள சுரங்கத்தின் நீளம் 4,309 அடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் சுரங்கம் 5.5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டுள்ளது.

மெக்சிகோவின் திஜுவானா பகுதியிலிருந்து, சண்டியாகோவின் தென்மேற்கு எல்லை வரை நீளும் இச்சுரங்கத்திற்கு அமெரிக்காவுக்குள் செல்லும் பகுதி மூடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சுரங்கத்தில், இழுவை வண்டி, உயர் மின்னழுத்தம் கொண்ட மின்சார வயர்கள், கழிவுநீர் அமைப்பு, காற்றோட்ட வசதி, நுழைவாயிலில் மின்தூக்கி உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இதனிடையே, குறித்த பகுதியில் எவ்வித போதைப் பொருட்களும் கண்டறியப்படவில்லை என்பதோடு, யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து சட்ட விரோதக் குடியேறிகளைத் தடுக்கவும் போதைப் பொருள் கடத்தலை ஒழிக்கவும் அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே மிகப்பெரிய சுவர் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறு சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகின்றமை பாதுகாப்புப் பிரச்சினை தரைக்குக் கீழே ஏற்பட்டுள்ளமையை வெளிப்படுத்துகின்றது.

““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`

Share this:

error: Content is protected !!