0041 79 785 16 85 wathanamtv@gmail.com

   இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து 3 மாற்றுத்திறனாளிகள் நடைபவனி ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள் 

தமிழ் மற்றும் முஸ்லிம் சிங்கள இனத்தைச் சேர்ந்த 3 மாற்றுத்திறனாளிகள் நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்கள் குறித்த நடைபவனி ஆனது இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமாகி வவுனியா ஊடாக இலங்கையின் அனைத்து பாகங்களுக்கும் சென்று 4ம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள சுதந்திர நிகழ்விலும் குறித்த மாற்று திறனாளிகள் கலந்துகொள்ள உள்ளார்கள்

 

மாற்றுத் திறனாளிகளுக்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஆறு அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கி சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி குறித்த மாற்று திறனாளிகள் நடைபயணத்தை இன்றைய தினம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பித்துள்ளார்கள்

Share this:

error: Content is protected !!