0041 79 785 16 85 wathanamtv@gmail.com

கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன் யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் நேற்று (புதன்கிழமை) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் யுன்ஹாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த யுவதி சில தினங்களுக்கு முன்பே இலங்கையை வந்தடைந்துள்ளார்.

22 வயதுடைய மொனாராகலையைச் சேர்ந்த குறித்த யுவதி, பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (ஜி.எம்.ஓ.ஏ) ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ, ஒரு வசதியான நோயாளர் காவு வண்டியின் உதவியுடன் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Share this:

error: Content is protected !!