0041 79 785 16 85 wathanamtv@gmail.com

தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாகாண விருது வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை(10) மாலை 7 மணியளவில் மன்னார் தனயார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

-மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாண கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

-இந்த நிலையில் வடமாகாண கிளையின் 2019 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றது.

-குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் சீனித்தம்பி மோகனராஜ்,விசேட விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

-மேலும் அரச திணைக்கள அதிகாரிகள்,வடமாகாணத்தைச் சேர்ந்த நிர்மாணத்துறை ஒப்பந்தகாரர்கள் உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

-இதன் போது 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த வடமாகாண தேசிய நிர்மாணிகளுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த றேமன் குரூஸ்(டிலக்ஸ்) ,பி.வி.டக்ஸன் ஆகிய இரண்டு தேசிய நிர்மாணிகளுக்கும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this:

error: Content is protected !!