0041 79 785 16 85 wathanamtv@gmail.com

வவுனியாவின் பல வீதிகளில் இளைஞர்களினால் அதிகவேகத்துடனும் பொதுமக்கள் மற்றும் , மாணவர்களை அச்சுறுத்தும் சத்தங்களுடனும் மோட்டார் சைக்கிள்கள் செலுத்தி வருவதாக விசனம் வெளியிடப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த பகுதிகளில் போக்குவரத்துக் கடமைகளை மேற்கொண்டு வரும் போக்குவரத்துப் பொலிசார், இவ்வாறு இடையூறு ஏற்படுத்தியவர்களின் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மக்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போக்குவரத்து பொலிசாரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் பொலிசாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமெனவும் அவர் இதன் போது கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this:

error: Content is protected !!