0041 79 785 16 85 wathanamtv@gmail.com
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பலத்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நல்லூர் ஆலய கொடியேற்ற உற்சவம்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பலத்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நல்லூர் ஆலய கொடியேற்ற உற்சவம்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பலத்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நல்லூர் ஆலய கொடியேற்ற உற்சவம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது எனினும் நாட்டில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உற்சவத்தினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆலயத்திற்கு வருகைதந்த அடியவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கைகளைக் கழுவி மாஸ்க் அணிந்து அடையாள அட்டை அல்லது தமது ஆள் அடையாளத்தை உறுதிப் படுத்தக் கூடிய ஆவணத்தை போலீசாரிடம் காண்பித்து ஆலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டார்கள் ஆலயத்தின் உட்புறத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அடியார்கள் அனுமதிக்கப்பட்ட தோடு ஆலயத்தின் உட்புறத்திலும் சமூக இடைவெளியை பின்பற்றகூடியவாறு ஆலய நிர்வாகத்தினரால் மக்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதேபோல் ஆலயத்திற்கு வெளியிலும் பொலிசாரினால் சமூக இடைவெளியை பின்பற்றி ஆலய உற்சவத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டதுஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை கொண்டு வராதவர்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனினும் வழமைக்கு மாறாக இம்முறை பலத்த கட்டுப்பாடுகளுடன் ஆலய உற்சவத்திற்கு பெருமளவில்மக்கள் கலந்து கொண்டிருந்தனர் பாதுகாப்பு கடமையில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்களை சோதனை சாவடிகளில் சோதனையிடும் நடவடிக்கையினை போலீசார் மற்றும் மாநகரசபை ஊழியர்கள்மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது…

இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன் நான் –இம்ரான்

இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன் நான் –இம்ரான்

இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன் நான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார். கோமரங்கடவல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தற்போது எமது நாட்டில் வாக்குகளை பெரும் ஆயுதமாகவும் வியாபார உத்தியாக்கவுமே இனவாதம் பயன்படுத்தப்படுகிறது.ராஜபக்ஸ சகோதரர்களால் எமது நாட்டில் அரசியல் நோக்கத்துக்காக பரப்பப்பட்ட இனவாதம் இன்று நாம் ஒருவரை ஒருவர் சந்தேக கண் கொண்டு பார்க்கவைத்திருக்கிறது சுமார் இருபது ,இருபத்தைந்து வருடங்கள் முன் நாம் இங்கு எவ்வாறு ஒற்றுமையாக இருந்தோம் என எமது பெற்றோர்கள் கூறி கேட்டிருப்போம். எனது தந்தை முஸ்லிம் பிரதேசங்களில் என்ன அபிவிருத்தி செய்தாரோ அதையே தமிழ் பிரதேசங்களிலும் செய்தார், அதையே சிங்கள பிரதேசங்களிலும் செய்தார். அன்று எம் மத்தியில் இனவாதம் இருக்கவில்லை. கட்சி வேறுபாடு மாத்திரமே காணப்பட்டது. அதுவும் தேர்தல் காலங்களில் மட்டும். அன்று எனது தந்தை உங்கள் பிரதேசங்களுக்கு செய்த அபிவிருத்தி போன்றே எனது குறுகிய கால அரசியல் பயணத்திலும் உங்கள் பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடிந்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது தந்தையின் அரசியல் பயணம் எவ்வாறு காணப்பட்டதோ அது போன்றே நானும் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன். எனக்கு வாக்களித்த மக்களுக்காக இன மத பிரதேச வேறுபாடுகளை தாண்டி எனது அபிவிருத்தி பணிகள் தொடரும் என தெரிவித்தார்.

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு.

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு.

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் மக்களின் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த யூன் மாதம் 7 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த பஸ் நிலையத்தில் அரச தனியார் போரூந்து சேவைகள் வைபவ ரீதியாக இடம் பெறும் வகையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் அவர்களினால் உத்தியோக பூர்வாமாக கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் தனியார் போரூந்து சங்கத்தின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட போதும் அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பிரதி நிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை. குறித்த பேரூந்து நிலையத்தில் தனியார் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு கோரிக்கையை ஏற்க மறுக்கின்ற கூட்டமைப்பும் ஏனைய தரப்பினரும் தோற்கடிக்கப்பட வேண்டும்

வடகிழக்கு கோரிக்கையை ஏற்க மறுக்கின்ற கூட்டமைப்பும் ஏனைய தரப்பினரும் தோற்கடிக்கப்பட வேண்டும்

எமது மக்களின் நிலங்கள் திட்டமிடப்பட்டு இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் பறிக்கப்படுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை(24) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது எமது தேசத்தை அங்கீகரிக்க இராஜதந்திர நகர்வை எமது தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கொண்டுள்ளார்.எனவே அம்பாறை மக்கள் ஆதரவினை வழங்க முன்வர வேண்டும்.வடக்கு கிழக்கு என்ற தாயக கோட்பாட்டுடன் உள்ள எமது தலைவரின் கரங்களை கிழக்கு மாகாணம் எதிர்காலத்தில் ஏனைய சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்படாது இருக்க ஆதரவினை வழங்க வேண்டும். இது தவிர இந்த வடகிழக்கு கோரிக்கையை ஏற்க மறுக்கின்ற கூட்டமைப்பும் ஏனைய தரப்பினரும் தோற்கடிக்கப்பட வேண்டும்.கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மூன்றில் ஒரு பங்கு தான் உள்ளனர்.இங்கு எமது மக்களின் நிலங்கள் திட்டமிடப்பட்டு இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் பறிக்கப்படுகின்றது.இதில் முஸ்லீம் மக்களை குற்றஞ்சாட்டவில்லை.இந்த அடிப்படை வாதிகள் நிலங்களை பறிப்பதுடன் நின்று விடாது சிங்களவர்களுடன் இணைந்து எமது மக்களின் உரிமைகளை பறிப்பதற்கும் துணை நிற்கின்றனர்.இதனால் பிரிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் தமிழர்களால் ஒன்றும் செய்ய முடியாது.இணைந்த வட கிழக்கு மாகாணத்தில் தான் எம்மால் உரிமைகளை வென்றெடுக்க முடியும். வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைவதன் ஊடாக கிழக்கு மாகாணத்தினை பாதுகாத்த கொள்ள முடியும்.எனவே இந்த ஆபத்தினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த ஆபத்தை விளங்கி கொண்டு இதற்கு முண்டுகொடுக்கின்ற தரப்பினரை தமிழ் மக்கள் இத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.தற்போது கல்முனை பிரதேச செயலக கோசத்துடன் அம்பாறையில் களமிறங்கியுள்ள கருணா அம்மான் கோட்டபாய ராஜபக்ஸவின் ஒரு முகவர் .இந்த கோட்டபாய ராஜபக்ஸவுடன் ஒன்றிணைந்து முஸ்லீம் மக்களும் உள்ளனர்.
முஸ்லீம் தலைவர்களும் அவரது செல்லப்பிள்ளைகளாகவே உள்ளனர்.இந்நிலையில் கருணாவினால் கோட்டபாயவிற்கு முன்னால் நின்று ஒரு வார்த்தை பேசவே முடியாது. கிழக்கு மாகாணத்தில் இந்த கருணா அம்மான் கோட்டபாயவிற்கு இடமுள்ளது என காட்டுவதற்காக வாக்குகளை பிரிக்கவே இங்கு வந்துள்ளார். எனவே இந்த சதிகளுக்குள் எமது மக்கள் எடுபட்டு விடக்கூடாது என கூறினார்.

சுமந்திரனின் பொய் காரணமாக மக்கள் அவரை நிராகரிப்பர்- அம்பாறையில் கஜேந்திர குமார் பொன்னம்பலம்

சுமந்திரனின் பொய் காரணமாக மக்கள் அவரை நிராகரிப்பர்- அம்பாறையில் கஜேந்திர குமார் பொன்னம்பலம்

சுமந்திரனின் பொய் காரணமாக மக்கள் அவரை நிராகரிப்பர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று(24) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது இன்றைக்கு சுமந்திரன் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வி அடைவார்.இவர் தனது கட்சி தலைவரினால் கூட நிராகரிக்கப்பட்டவர். இவருடன் நான் எப்படி விவாதத்திற்கு சென்று மக்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க போவதில்லை.நான் ஒரு கட்சியின் தலைவர் .சுமந்திரன் என்பவர் என்னுடன் விவாதிப்பதற்கு தகுதி இல்லை.இவருடன் பல இடங்களில் விவாதித்துள்ள நிலையில் தனது முகத்தை தற்போது ஒளித்துக்கொண்டு திரிகின்றார்.அத்துடன் தப்புவதற்கான சில வழிகளை தேடி வருகின்றார் என குற்றஞ்சாட்டினார்.

கிண்ணியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உரையாற்றினார்.

கிண்ணியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உரையாற்றினார்.

கிண்ணியாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து( 23) இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றும்போது திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரக் கூடிய தேர்தலில் இரண்டு ஆசனங்களையும் போனஸ் ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் என தெரிவித்தார் இன்று இருக்கின்ற ஆட்சியாளர்களின் ஆணவ போக்கும், அகங்கார அரசியலும் இன்று முஸ்லிம்களை வேண்டுமென்றே ஓரவஞ்சனை யோடு பார்க்கின்ற பார்வையும் மாற வேண்டுமாக இருந்தால் எங்களுடைய ஆதரவு இல்லாமல் எந்த தேசியக் கட்சியும் திருகோணமலை அம்பாறை இந்த இரண்டு மாவட்டங்களிலும் எதையுமே வெல்ல முடியாது. கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை கைப்பற்றுவோம் எதிர் வரக்கூடிய தேர்தலில் அதற்கான முதல் படியாக இந்த பொதுத்தேர்தல் திருகோணமலை மாவட்டத்தில் வெற்றி பெறுகின்ற இரண்டு ஆசனங்களும் அம்பாறையில் பெறுகின்ற மூன்று வசனங்களும் மட்டக்களப்பில் பெறுகின்ற ஒரு ஆசனமும் மக்கள் மத்தியில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான விவகாரத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய அந்த வியூகம் பளிக்க போகின்றது. எனவே இது ஒரு பாராளுமன்றத்துக்கான வியூகம் மாத்திரமல்ல அடுத்த கட்டமாக மாகாண ஆட்சியை கைப்பற்றுவதன் மூலம் மாவட்டங்களை வெல்வது அதன் மூலமாக இந்த ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கும், கொட்டத்திற்கு எங்களுடைய பதிலைச் சொல்வது முஸ்லிம் சமூகத்தின் கவசமாகவும் செயற்படுவோம் என தெரிவித்தார்.

error: Content is protected !!