0041 79 785 16 85 wathanamtv@gmail.com
யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் கொள்ளையிடும் சம்பவம் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்களினால் பதியப்பட்டுள்ளன. அவை தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இன்றும் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மக்களுக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன் யாழ்ப்பாண குடாநாட்டில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணியாது செல்வதன் மூலம் திருட்டு செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனினும் பொலிசாரினால் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நாளாந்தம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வருகின்றார்கள் எனவே இது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்

சட்டவிரோதமாக 40 பசு மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது.

சட்டவிரோதமாக 40 பசு மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது.

சட்டவிரோதமாக உரிய அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட 40 பசு மாடுகளை சவளக்கடை பொலிசாஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 40 பசு மாடுகளே புதன்கிழமை(15) நள்ளிரவு மீட்கப்பட்டது. இவ்வாறு சவளக்கடை பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி கால்நடையாக நடத்தி கொண்டு சென்ற நிலையில் மீட்கப்பட்ட 40 பசு மாடுகள் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நடவடிக்கையானது சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர்.அத்துடன் 40 பசு மாடுகளை சட்டவிரோதமாக கால்நடையாக நடத்திக் கொண்டு சென்ற இரு சந்தேக நபர்களை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார பிரிவினரால் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இன்று இடம்பெற்றது.குறித்த கூட்டத்தின் போது பல்வேறு பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது வாக்களிப்பு நிலையங்களில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து தேர்தல் திணைக்களம் பொறுப்பேற்கவுள்ளதெனவும் அன்றிலிருந்து அந்த வாக்களிப்பு நிலையத்தில் கிருமித் தொற்று நீக்கம் செய்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் தினத்தன்று மக்கள் வாக்களிக்கக் கூடிய வாறான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளமை தொடர்பில்இன்றைய தினம் ஆராயப்பட்டது. அதேபோன்று பல்வேறு பட்ட விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் மற்றும்யாழ்மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம் காணி தொடர்பான வழக்கு இன்று நிதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம் காணி தொடர்பான வழக்கு இன்று நிதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம் காணி தொடர்பான வழக்கு இன்று திருகோணமலையில் உள்ள மாகாண மேல்நீதி மன்றத்திலே நிதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் வழக்காளியும் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளருமாகிய கோகிலரமணி அம்மா சார்பில் வழக்கறிஞரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம.ஏ. சுமந்திரன் ஆஜராகி இருந்தார்.இதன் போது கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் காலை 10.40 முதல் 12.30 வரை இடம்பெற்ற வழக்க விசாரனையில் அரச தரப்பிலே இன்றைய தினம் முன்னெடுத்த வாதமானது.இது புராதண பொக்கிசம் சம்மந்தப்பட்ட விடயம் என்பதனால் தேசிய புராதண பெக்கிசம் என்பதனால் மாகாண மேல் நீதி மன்றத்திற்கு நியாயதிக்கம் இல்லை என்றும் கொழும்பில் உள்ள மேல் முறையீட்டு நீதி மன்றத்திலே தாக்கல் செய்திருக்க வேண்டும்.என்றும் வாதிட்டனர். ஏற்கனவே இந்த வாதம் நீதி மன்றத்தின் முன் வைக்கப்பட்டு இந்த வாதம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் இடைக்கால உத்தரவு சம்பந்தமாக நாங்கள் வாதிட்ட போது எப்படியாக மாகாண மேல் நீதி மன்றத்திற்கு நியாதிக்கம் கிடைத்திருக்கின்றது என நான் வாதிட்டு இருந்தேன்.அதை மேல் நீதி மன்றம் ஏற்றுக் கொண்டு இந்த வழக்கை தொடர்ந்து நடாத்தி இருக்கின்றது. மேல் நீதி மன்றத்திற்கு எதிராக எந்த முறையீடுகளும் அரச தரப்பு செய்திருக்க வில்லை எனவே ஏற்கனவே அமுலில் இருக்கும் உத்தரவை மாற்ற முடியாது என்பதே என்னுடைய வாதமாக இருந்தது.

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பகுதியில் 111 கிலோ கஞ்சா போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பகுதியில் 111 கிலோ கஞ்சா போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பகுதியில் கஞ்சா போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 111 கிலோ கஞ்சா போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமாக சென்ற படகினை கடற்படையினர் மறித்து சோதனையிட்டுள்ளனர். இதன் போது அதில் இருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாசையூர் மற்றும் நாவாந்துறை பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே என்று தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மீட்கப்பட்ட 111 கிலோ கஞ்சா ஆகிய போதைபொருள் ஊர்காவற்றுறை பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஊடாக பாரப்படுத்தப்படரடுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில்  பஞ்சமுக விநாயக பெருமான் அடியவர்களுக்கு அருள் பாலித்தார்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் பஞ்சமுக விநாயக பெருமான் அடியவர்களுக்கு அருள் பாலித்தார்


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் காமிக உற்சவத்தின் ஒன்பதாவது நாளான இன்று பஞ்சமுக விநாயக பெருமான் சிங்காசனத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் பாலித்தார். ஆடிப் பிறப்பான இன்றைய தினம் ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று பஞ்சமுக விநாயக பெருமான் சிங்காசனத்தில் உள்வீதி எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலித்தார். இவ் உற்சவத்தில் பெருமளவிலான விநாயக அடியவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

error: Content is protected !!