சிறப்பாக இடம் பெற்ற மொழி கல்வி சான்றிதல் வழங்கும் நிகழ்வு

Date: 2024-11-05
news-banner
 தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வடமாகானத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்காக மேற்கொண்ட 150 மணித்தியால பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு   மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் சிரேஸ்ர மொழிப்பாட தேசிய வளவாளர் E. சாகரிகா பிகிறாடோ தலைமையில் இடம் பெற்றது

 2020 ஆண்டு அரச கரும மொழி அமைச்சினால் வெளியிடப்பட்ட 18 ம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அரச உத்தியோத்தர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கு மேற்படி சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது

 குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, தேசிய மொழிக்கல்வி மற்றம் பயிற்சி நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் திரு டிலான் ரணசிங்க அவர்களும், தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் திரு அஸ்வின் பாலக்கிருஷ்ணன் அவர்களும், மற்றும் இரண்டாம் மொழிபாட வளவாளர் சுபாஜினி விநாயகமூர்த்தி அவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் 

 குறித்த நிகழ்வில் சிங்கள கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களால் பல்வேறு கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது அதே நேரம் புதிய சிங்கள பாடநெறியானது (Zoom தொழில் நுட்பம், மற்றும் நேரடி வகுப்பு) ஆரம்பிக்க உள்ள நிலையில் பயிற்சி நெறியை தொடர விரும்புவோர் 0776355521 தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..


மன்னார் நகர் நிருபர்

ஜோசப் நயன்

image

Leave Your Comments