சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை கொப்புவாய்கால் மீது....
கழிவு நீர் கால்வாய் அமைப்பு
கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அக்கரைதத்தப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் 415 ஏக்கர் விவசாய நிலங்கள் கீழ்பவானி 3/2 கொப்பு வாய்க்கால் மூலம் முதல் போகம் மற்றும் இரண்டாம் பாகம் பாசன வசதிக்கு தண்ணீர் திறந்து விடும்போது இதன் மூலம் வாழை மஞ்சள் மல்லிகைப்பூ போன்றவை விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திரா நகர் பகுதியில் உதண்டியூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கொப்பு வாய்க்காலை மறைத்து அதன் வழித்தடத்தில் மனிதக் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது இதற்கு இக்கரை தத்தப்பள்ளி பகுதி சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கழிவுநீர் கலந்த தண்ணீரை கொப்பு வாய்க்காலில் கொண்டு செல்வதால் கொப்பு வாய்க்காலில் ஆண்டுதோறும் முதல் போக்கத்திற்கும் இரண்டாம் பருவத்திற்கும் தண்ணீர் திறந்து விடும் போது கொப்பு வாய்க்காலில் தண்ணீர் வராது.
இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயம் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பைப் லைன் அமைத்து கழிவு நீரை வேறு வழி தடத்தில் கொண்டு செல்ல வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்