மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு-ஒருவர் கைது.

Date: 2024-10-25
news-banner
மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில்  15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு-ஒருவர் கைது.

(ஜோசப் நயன்)

(25-10-2024)

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரப்புக்கடந்தான் கிராமத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த  யானை அண்மைக்காலமாக பரப்புக் கடன் தான் பகுதியில் பல விவசாய நிலங்கள் மற்றும் விவசாய காணிகளில் சுற்றித்திரிந்த தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த யானை   நேற்று (24)  இரவு உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

யானை இறந்த இடத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த யானை சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட மின்சார வேலியில்  சிக்குண்டு   இறந்திருப்பதாக   தெரிவித்தனர்.

 இறப்பு சம்பவம் தொடர்பில் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மன்னார் நகர்  நிருபர்
ஜோசப் நயன்

image

Leave Your Comments