கர்நாடக மாநிலத்தில் கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவரை பவானிசாகர் போலீசார் கைது செய்து கர்நாடக மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கர்நாடக மாநிலம் சுள்ளியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக பவானிசாகர் பழைய இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ராகவன் @ கோழிக்கரன்-26 என்பவரை
கர்நாடகா மாநிலம் சுள்ளியா காவல் நிலைய போலீசார் 05.10.2024 ம் தேதி அதிகாலை பவானிசாகர் பழைய இலங்கை அகதிகள் முகாமில் வைத்து கைது செய்து கர்நாடகா சுள்ளியா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
ராகவன் (எ) கோழி கரன்-26 என்பவரை 06.10.2024 ம் தேதி மருத்துவ பரிசோதனைக்கு கர்நாடகா மாநிலம் சுள்ளியா புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவமனையிலிருந்து தப்பித்து சென்று தலைமறைவாக இருந்துள்ளார்.
இதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் சுள்ளியா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடிவந்த நிலையில்
25.10. 2024 ஆம் தேதி கோழி கரனை பவானிசாகர் போலீஸாரால் பவானிசாகர் பழைய இலங்கை தமிழர் முகாமில் வைத்து கைது செய்து கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டைத்தனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்