Top

முல்லைத்தீவின் தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு

Date: 2024-10-26
news-banner
முல்லைத்தீவின் தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி செல்வராஜ் டினேசனின்  தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது

இந்த நிகழ்வானது இன்றைய தினம் காலை 10 மணியளவில் இடம் பெற்றது.

இதன் போது  தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

 அத்துடன் அலுவலகம் திறந்த பின்னர் முல்லைத்தீவு மற்றும் விசுவமடு பகுதி கிராமங்களில் பிரச்சார நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்ட போது   டினேசன் அவர்களுக்கு முல்லைத்தீவு மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்.



மன்னார் நகர்  நிருபர்
ஜோசப் நயன்
image

Leave Your Comments