பவானிசாகர் அருகே சாலை விபத்தில் பெண் உட்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளன சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பனையம்பள்ளி சோழவனூர் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சம்பத் என்பவர் சொந்தமாக கார் வாங்கலாம் என முடிவு செய்து ஈரோடு திண்டலில் உள்ள V. S Carz private limited, க்கு போன் மூலம் பேசியதின் பேரில் இன்று 26.10.2024 தேதி மதியம் சுமார் 12 45 மணிக்கு Test Drive செய்வதற்காக மேற்படி சம்பத் என்பவரின் ஊரான சோலவனூரில் V. S Carz private limited ல் பணிபுரியும் ஈரோடு ஆர் என் புதூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் மணிகண்டன் என்பவர் இருந்து புளியம்பட்டி- பவானிசாகர் ரோட்டில் புதிய ப்ளூ கலர் TATA-TIAGO காரில் பவானிசாகர் மெஸ் பேருந்து நிறுத்தம் அருகில் கிழக்கிலிருந்து மேற்காக Test Drive செய்து கொண்டிருக்கும் பொழுது, அதே திசையில் TN 38 AE 3102 சிவப்பு நிற TVS Star City - ல் அதே திசையில் காயம் பட்டவர்கள் வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மேற்படி இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த ரங்கநாதன் திடீரென U Turn செய்தபொழுது விபத்து ஏற்பட்டது.
இதில் ரங்கநாதன் என்பவருக்கு மூக்கில் பலத்த காயம் பட்டுள்ளது. ஏஞ்சலின் என்பவருக்கு கால்களில் காயம் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்தார்
கார் ஓட்டுநர் மணிகண்டன் 31,
என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்படி காயம்பட்டவர்களை தனியாக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்