ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூரில் உள்ள தனியார் அரங்கில் ஒன்றில் பெரியாரியல் பயிற்சி பட்டறை திராவிட கழகம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெற்றது இந்த பயிற்சி பட்டறையில் திராவிட கழகத் தலைவர் கி வீரமணி பெரியார் இயல் பேராசிரியர்கள் பங்கேற்று பாரம் நடத்தினார் புதிய இளைஞர்கள் மாணவர்கள் பெரியாரின் தலைசிறந்த கொள்கை கற்று தேடுவதற்காக ஈரோடு மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள், பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு ,சாமி ஆடுதல் அறிவியல் விளக்கம், சமூக நீதி வரலாறு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், இந்து இந்துத்துவ சங்பரிவர் மற்றும் இணையதள பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது ..
இதனை தொடர்ந்து 27ஆம் தேதி இந்து தமிழக திராவிடர், புராண இதிகாசப் புரட்டுகள், தந்தை பெரியாருக்கு பின் திராவிடர் கழகம், மாணவர்களின் கேள்வியும் ஆசிரியர்களின் பதிலும் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்குவது குறித்து கி. வீரமணி.
தமிழகத்தில் எது எதுக்கோ உச்சவரம்புகள் உள்ள நிலையில்..
தமிழகத்தில் புது புது கட்சிகள் தொடங்குவதற்கு எந்த உச்சவரமும் இல்லை. ....
தமிழகத்தில் எதை விளம்பரப்படுத்தி கருத்துக்களைக் கொண்டும் எதையெல்லாம் தவிர்க்க முடியாதோ அதை எல்லாம் பயன்படுத்தி கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருகிறார்கள்...
அதை மட்டும் தற்போது நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள்
முதலில் அவரது கொள்கை பதிவு செய்யட்டும். அதன்பின் நாங்கள் எங்கள் கருத்தை பதிவு செய்கிறோம்
தமிழக வெற்றி கழகம் முதல் மாநில மாநாடு பெரியார் அம்பேத்கர் உட்பட தலைவர் படங்களை வைத்து உள்ளார்.
எந்தக் கொள்கை அடிப்படையில் கட்சி தொடங்கி உள்ளார் என்பதை முதலில் விஜய் அவரது கட்சி கொள்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்....
ஆசனூர் மலை கிராமத்தில் உள்ள தனியார் அரங்கில் பெரியார் திராவிட கழகத்தின் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி செய்தியாளர் சந்திப்பின்போது பேட்டியளித்தார்..
இந்த பயிற்சி பட்டறையில் சத்தியமங்கலம் பவானிசாகர் புஞ்சை புளியம்பட்டி மற்றும் ஆசனூர் தாளவாடி கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள இளைஞர்கள் இளம்பெண்கள் என கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்