மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் நிகழ்ச்சி -ஊராட்சிமன்ற தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்றது.

Date: 2023-12-29
news-banner
மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் நிகழ்ச்சி -ஊராட்சிமன்ற தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்றது.
     ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லம் ஊராட்சி ஒன்றிய கோண மூலை  ஊராட்சியில், தமிழ் நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், பிரதம மந்திரி மீன்வள மேம்பா ட்டு திட்டம் 2022-23 திட்டத்தின் கீழ்,பவானி ஆற்றில், நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் நிகழ்ச்சி,கோண மூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் என்கிற பா. செந்தில் நாதன் தலைமையில்,மீன் வளத்துறை துணை இயக்குனர், தில்லைராஜன் மற்றும் உதவி
இயக்குநர் கதிரேசன் முன்னிலையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், தற்போது கடந்த சில ஆண்டுகளாக, ஆறுகளில் நாட்டின மீன்கள் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு ஏற்ப, இல் லாமல்,பெருமளவு குறைந்து வருவதால், மீன் வளத்துறை சார்பில், நாட்டின மீன் வகைகளான கட்லா, ரோகு ,மிர்கால். கல்பாசு, சேல் கெண்டை உள் ளிட்ட மீன் வகைகளில், 50ஆயிரம் மீன் குஞ்சுகள்,பவானி ஆற்றில்விடப்பட்டன.நிகழ்ச்சியில், மீன் ஆய்வாளர்கள் ரமேஷ் பாபு, சசிக்கலா, முகமது பானு, பிரபுமற்றும் திமுக சத்தி தெற்கு ஒன்றிய மீனவரணி செயலாளர் ரவிச்சந்திரன்,அதிமுக நகர மீனவர் அணி செயலாளர்குமா ர், 26 வது வார்டு உறுப்பினர் குமார்,துரைசாமி, முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் அங்கப்பன், மற்றும் பொது மக்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

image

Leave Your Comments