சத்தியமங்கலம் பகுதியில் சுற்றி திரியும் பைக் திருடர்கள், போலீசார் வலைவீச்சு... ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பைக் திருடர்கள் சுற்றி திரிவது சத்தியமங்கலம் நகர் பகுதியில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகளை வைத்து சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேஷ் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்
இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் இவர்களை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.