அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகுண்ட ஏகாதேசி விழா
கோபி அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாத சி முன்னிட்டு இன்று
அதிகாலை6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது முன்னதாக அதிகாலை4 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது தொடர்ந்து 6:30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது இதைத் தொடர்ந்து அமுதசுரபி அறக்கட்டளை சார்பில் பக்த கோடிகள் அனைவருக்கும் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது முன்னதாக மார்கழி ஆறாம் தேதி இரவு அண்ண பூரணி அறக்கட்டளை சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டனர் கோபி காவல்துறை சார்பாக கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி சிறப்பாக பணி செய்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ரத்தினாம்பாள் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சீனிவாசன் குமாஸ்தா ஈஸ்வரன் சிறப்பாக செய்திருந்தனர்