சத்தியமங்கலம் பிரசித்தி பெற்ற வேலு கோபால்சாமி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா... சத்தியமங்கலம் பிரசித்தி பெற்ற வேலு கோபால்சாமி ஆலயத்தில் சொர்க்கவாசி திறப்பு விழா ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர். விழாவையொட்டி கோயிலில்
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு சாத்துமுறை நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம், திருப்பாவை மற்றும் ஆண்டாள் பாசுரங்கள் பாடி சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டு அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் நடைதிறக்கப்பட்டது. பக்தர்கள் புடைசூழ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் உற்சவர் வேணுகோபால சுவாமி எழுந்தருளி, பரமபதவாசல் வழியாக புறப்பாடாகி பக்தர்களுக்கு 'அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் 'ரங்கா கோவிந்தா' என பக்திப்பரவசம் பொங்க பரமபதவாசல் பிரவேசம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர்.