பவானிசாகர் பேரூராட்சியை அடுத்த தொப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சுற்று சூழல் ஆர்வலர் ராஜவிக்ரம். இவர் தனது சொந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுடன் பனை விதை நடுதல்,மரம் நடுதல் போன்ற சுற்று சூழல் சார்ந்த பணிகளை செய்து வருகிறார் இந்த நிலையில் கடந்த ஆண்டு மழை காலத்தில் நடப்பட்ட புங்கன், நாவல், வாகை, வேம்பு மரக்கன்றுகள் தற்போது வறட்சி காரணமாக வாடி கொண்டு உள்ளதால் தன்னுடைய சிறிய ரக ட்ரெக்டரில் தண்ணீர் டேங்க் பொருத்தி தனது சொந்த செலவில் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிபராமரித்து வருகிறார் நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவ மழையின் போது இன்னமும் தொப்பம்பாளையம் கிராமம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க போவதாக தெரிவித்தார். தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் ஆலமர கிளைகளை ஆடு கடிக்காத வகையில் 6அடி கிளைகளை நட்டும் வளர்த்து வருகிறார். இவரின் இச் செயலை கண்டு பொதுமக்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.